முந்தய பக்கம்

உடுமலையில் செம்மொழி பூங்கா அமைக்க வலியுறுத்தல்

21 Dec 2025, 3:21 pm
உடுமலையில் செம்மொழி பூங்கா அமைக்க வலியுறுத்தல்
<p><strong>உடுமலையில் செம்மொழி பூங்கா அமைக்க வலியுறுத்தல்</strong></p> <p>உடுமலை, டிச.21- உடுமலையில் எத்தலப்பர் சிலை அருகே செம்மொழி பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரான தளி பாளையக்காரர் எத்தலப்பருக்கு, கடந்த 2023 ஆம் ஆண்டு திருமூர்த்திமலையில் மணி மண்டபமும், உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அவருக்கு சிலையும் தமிழக அரசால் வைக்கப்பட்டது. ஆனால், மணிமண்டபம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், சிலை இருக்கும் இடம் வாகனம் நிறுத்தும் இடமாக உள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்த எத்தலப்பருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மணி மண்டபம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மணிமண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இச்செயல் திருமூர்த்தி மலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபங்களுக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக சந்தேகத்தை ஏற்படுகிறது. எனவே, உடனடியாக மணிமண்டபத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும். &nbsp;அதேபோல், உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் எத்தலப்பர் சிலை இருக்கும் இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அறிவித்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், சிலை இருக்கும் இடம் தற்போது நகராட்சி வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. இது தமிழக முதல்வர் திறந்து வைத்த சுதந்திர போராட்ட வீரர் சிலைக்கு மரியாதையாக இருக்காது. எனவே, நகராட்சி நிர்வாகம் செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram