தினந்தோறும் விபத்துகளை ஏற்படுத்தும் வேகத்தடையை மாற்றியமைக்க வலியுறுத்தல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>தினந்தோறும் விபத்துகளை ஏற்படுத்தும் வேகத்தடையை மாற்றியமைக்க வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, நவ.16- அன்னசாகரம் பகுதியில் தினந்தோறும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வேகத்தடையை, மாற்றிய மைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி நகராட்சி, 32 மற்றும் 33 ஆவது வார்டுகளுக்குட்பட்ட அன்னசாகரம் பகுதி யில், பாலம் அருகே வளைவில் கடந்த வாரம் புதியதாக நகராட்சி சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது. வளைவில் வேகத்தடை அமைக்கப்பட்டதால், நாள்தோறும் இருசக் கர வாகனத்தில் செல்வோர் வேகத்தடை தெரி யாமல் கீழே விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சாலையை முக் கல்நாயக்கன்பட்டி, எட்டிமரத்துபட்டி, மிட்டா நூலஅள்ளி, வெங்கட்டம்பட்டி, மாதேமங்க லம், உங்கரானஹள்ளி, வத்தல்மலை உள் ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல் லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல் லும் பணியாளர்கள், விவசாயிகள் என தினந் தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வரு கின்றனர். இரவு நேரங்களில் சாலையில் வளைவில் திரும்பும்போது வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காய மடைந்து வருகின்றனர். கடந்த ஆறு மாதத் திற்கு முன்பே வேகத்தடையை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அகற்றப்பட்ட வேகத்தடை, தற்போது மீண்டும் அப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ளது. வேகத்தடை அமைக்க வேண் டும் என்றால், வளைவு பகுதியை அடுத்து வரு மான வரி அலுவலகம் அருகே அமைக்கலாம் என்றும், வளைவில் இருக்கும் வேகத்த டையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p> </p>
