தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில்வே சுரங்கப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

9 Dec 2025, 4:25 pm
ரயில்வே சுரங்கப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
<p><strong>ரயில்வே சுரங்கப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்</strong></p> <p>-ஜி.லெனின்- தருமபுரி, டிச.9- குமாரசாமி பேட்டை ரயில்வே கேட் மேம் பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங் கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி - பென்னாகரம் சாலை, குமார சாமி பேட்டை ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இப்ப குதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு தின மும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவி கள் மேம்பாலத்தை கடந்து சென்று வருகின்ற னர். இந்த மேம்பாலத்தில் தொடர்ந்து அதிக ரிக்கும் வாகன போக்குவரத்தை கட்டுப்ப டுத்தவும், விபத்து அபாயமின்றி பொதுமக் கள், மாணவர்கள் இப்பகுதியை எளிதாக கடக்கவும், இம்மேம்பாலத்தின் வடக்கு பகுதி யில் உள்ள தண்டவாளத்தின் கீழ் கடந்த 7 &nbsp;ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக் கப்பட்டது. ஆனால், முறையான பராமரிப்பு &nbsp;செய்யாததல், தற்போது வரை பொதுமக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடிய வில்லை. இந்த பாதையின் நுழைவாயில் பகுதிகள் புதர் மண்டிய நிலையில் காணப்படுகின்றன. இதுகுறித்து தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூறு கையில், குமாரசாமி பேட்டை பகுதியில் மக் கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட சுரங் கப்பாதை இதுவரை பயன்படுத்தப்படாமல் சிதிலமடைந்து வருகிறது. இந்த பாதையின் கிழக்கு பகுதியை பலர் கழிப்பிடமாக பயன்ப டுத்தி வருகின்றனர். மாதக்கணக்கில் மழை நீர் தேங்கி நிற்பதால், கழிவுநீர் கால் வாய் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சுரங்கப்பாதை வழியாக சில அடி &nbsp;தூரத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல &nbsp;வேண்டிய பொதுமக்கள் மற்றும் மாணவர் கள், ரயில்வே மேம்பாலம் வழியாக சுமார் 2 கி.மீ. தூரத்தை சுற்றி வந்து சிரமப்படும் நிலை &nbsp;தொடர்கிறது. விரைவில் தருமபுரியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதனால் தருமபுரி நகரத்தை யும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் இந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். எனவே விபத்து அபாயத்தை தடுக்க வும், போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணவும் ரயில்வே சுரங்கப்பாதையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், இருசக்கர வாகனங்க ளில் செல்வோர் பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வேண்டும், என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.