போதியளவில் மருத்துவர்களை நியமித்து, முழுமையான மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
21 Dec 2025, 3:21 pm
<p><strong>போதியளவில் மருத்துவர்களை நியமித்து, முழுமையான மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!</strong></p>
<p>உடுமலை, டிச.21- மடத்துக்குளம் அரசு மருத்துவ மனையை 24 மணி நேரமும் செயல் பட, அனைத்து துறைகளுக்கும் மருத்துவர்களை நியமனம் செய்து, மக்களுக்கு முழுமையான மருத்து வம் கிடைக்க சுகாதாரத்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தின் மையப்பகுதி யில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருந்துவமனை யாக தரம் உயர்தப்பட்டு அதே வாளகத்தில் புதிய கட்டிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 30 படுக்கை அறைகளுக் கான கட்டிடம், ரூ.30 லட்சம் நிதியில் கட்டப்பட்டது. மேலும், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, மருத்துவ உபகர ணங்கள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்து, மக்கள் பயன் பாட்டிற்கு வந்தது. ஆனால், மருந்து வமனையில் அனைத்து துறைக ளுக்கும் மருந்துவர்கள் நியமிக்க படாமல் உள்ளதால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பெரும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இத் தகைய சூழலில் செயல்படும் இந்த மருத்துவமனை, திருப்பூர் - திண்டுக் கல் மாவட்டத்தின் எல்லைப்பகுதி யில் அமைந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தின் சாமி நாதபுரம் முதல் தாளையம் வரை யிலுள்ள மக்கள், தொழிற்சாலை களில் வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதி மக்கள் இந்த மருந்துவம னைக்கு செல்லாமல் தங்களுடைய மருத்துவ தேவைகளுக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடுமலை நகருக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. விரிவுபடுத்தபட்ட மருத்துவ மனைக்கு குறைத்தபட்சம் எட்டு மருத்துவர்களும், அதேபோல் சிப்ட்-க்கு குறைந்தபட்சம் எட்டு செவிலியர்கள் என இருபத்தி நான்கு பேர் இருக்க வேண்டும். ஆனால், குறைந்த அளவிளான மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கள் உள்ளதாக பொது மக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இங்கு போதிய பராமரிப்பு ஊழி யர்கள், மருந்துகள் என மருத்து வமனைக்கென்று அடிப்படையாக இருக்கும் எவ்வித வசதிகளும் இல்லாமல் உள்ளது. எனவே, இந்த மருத்துவமனையை இரு பத்தி நான்கு மணி நேரமும் செயல் படுத்தும் வகையில், அவசர கால சிக்கிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முழுமை யாக ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் போதிய ளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். பொதுமக்களுக்கு முழு மையான மருத்துவம் கிடைக்க மாநில சுகாதாரத்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது.</p>
<p> </p>
