ஆன்லைன் அபராதத்தை கைவிட வலியுறுத்தல்
18 Nov 2025, 3:21 pm
<p><strong>ஆன்லைன் அபராதத்தை கைவிட வலியுறுத்தல்</strong></p>
<p>ஈரோடு, நவ.18- ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம் மேளனம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனக் கூட்டம் ஈரோட்டில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செயல் தலைவர் ஆறு முக நயினார் தலைமை வகித்தார். தலை வர் பி.பாலகிருஷ்ணன், பொதுச்செய லாளர் வி.குப்புசாமி, ஈரோடு மாவட்டச் செயலாளர் பி.கனகராஜ் மற்றும் சம்மே ளனக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மோட் டார் வாகன தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை பாதிக்கும் ஆன் லைன் அபராத முறையை கைவிட வேண்டும். தமிழக முழுவதும் வாகனங் கள் நிறுத்தும் இடங்களை மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் அங்கீகரிக்க வேண்டும். புதிய வாகன நிறுத்தும் இடங்களை ஏற்படுத்தித்தர வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அப் புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.</p>
