முந்தய பக்கம்

உரையாடு உரையாடு - (பழனி சோ.முத்துமாணிக்கம்)

13 Jun 2026, 8:01 pm
உரையாடு உரையாடு - (பழனி சோ.முத்துமாணிக்கம்)

உரையாடு உரையாடு - (பழனி சோ.முத்துமாணிக்கம்)

எடுப்பு உரையாடு உரையாடு! உள்ளன் போடு உரையாடு; உலகம் செழிக்க உரையாடு;

தொடுப்பு மழலைக ளோடு உரையாடு; மகிழ்ச்சி நெஞ்சினில் ஊறிடவே; பழகிடும் நண்பர் உயிரெனவே பாசம் பொங்கிட உரையாடு;

அம்மா அப்பா அறிவுரைகள் அமுதம் உண்ண உரையாடு! செம்மா துளையின் முத்தைப்போல் சிரிக்கச் சிரிக்க உரையாடு!

ஆசிரிய ரோடு உரையாடு; அகிலம் புரிய உரையாடு! பேசிடும் கலையை நீவளர்க்கப் பெரியவ ரோடு உரையாடு!

செம்மொழி இலக்கியச் சிறப்புணர சிந்தித் தென்றும் உரையாடு; வம்புப் பேச்சுகள் நீதவிர்க்க வாகாய்த் தமிழில் உரையாடு!

புத்தகத் தோடு உரையாடு; புவியியல் அறிவியல் வரலாறு வித்தகன் வள்ளுவன் குறளோடு விரும்பி நிதமும் உரையாடு!

உலகில் போர்கள் மறைந்திடவே உள்ளன் போடு உரையாடு; கலைகள் ஆயிரம் பயின்றிடவே கருத்தாய் என்றும் உரையாடு!

உன்னை உயர்த்த உரையாடு; உண்மை வெல்ல உரையாடு; பொன்னைப் போன்ற நாவன்மை பொலிந்திடத் தொடர்ந்து உரையாடு!

Share
FacebookXWhatsAppTelegram