தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

25 Feb 2026, 2:26 pm
வாய்ப்பு வாசல்

யூபிஎஸ்சி  IES–ISS  தேர்வு  அறிவிப்பு  2026

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான Union Public Service Commission (UPSC) Indian Economic Service (IES) மற்றும் Indian Statistical Service (ISS) தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகளில் அரசு அதிகாரி பணிகளில் சேர இந்த தேர்வு நடத்தப்படுகிறது.  44 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Economics / Applied Economics / Business Economics / Econo metrics போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது Statistics / Mathematical Statistics / Applied Statistics துறைகளில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி 21 வயது முதல் 30 வயது வரையில் இருக்க வேண்டும்.  எஸ்.சி./எஸ்.டி–5 ஆண்டுகள், ஓ.பி.சி–3 ஆண்டுகள் வயதுத் தளர்வு  வழங்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பொதுப்பிரிவினருக்கு ரூ.200 விண்ணப்பக்கட்டணமாகும்.  பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவை யில்லை. www.upsconline.nic.inஎன்ற இணை யதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி மார்ச் 3, 2026 ஆகும்.

RBI – யில் 650 காலிப் பணியிடங்கள்

இந்தியாவின் மத்திய வங்கியான Reserve Bank of India (RBI) பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள 650 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தற்போது அதற்கான  விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு அவசியம். சம்பந்தப்பட்ட மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: பிப்ரவரி 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை  இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி SC / ST /  OBC / PWD பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். தேர்வு முறை: தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். முதலில் முதல்கட்டத் தேர்வு (Preliminary)  ஆன்லைனில் எழுத வேண்டும்.  அதில் தேர்ச்சி பெறுவோர் முதன்மைத் தேர்வு (Main Examination) எழுத வேண்டும். இறுதியாக மொழித் திறன் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பக் கட்டணம் : பொது/ஓ.பி.சி பிரிவினர்களுக்கு ரூ.450. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் தொடர்பான காலியிட விவரம், தேர்வு முறை, பாடத்திட்டம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு www.rbi.org.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிட்டு ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி  மார்ச் 8, 2026 ஆகும்.

கோல் இந்தியா லிமிடெட் – 270 Assistant Foreman பணிகள்

அரசு நிறுவனமான Coal India Limited நிறுவனத்தின் துணை நிறுவனமான Nort hern Coalfields Limited (NCL) நிறுவனத்தில் 270 Assistant Foreman பணி யிடங்களை நிரப்புவதற் கான விண்ணப்பம் வெளி யாகியுள்ளது.   கல்வித் தகுதி:  Mechanical / Electrical / Electronics & Telecom munication Engineering போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு:  குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயது வரை.  எஸ்.சி./எஸ்.டி–5 ஆண்டு கள், ஓ.பி.சி–3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிப்படி வயதில் தளர்வு வழங்கப்படும். தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு Computer Based Test (CBT), சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  விண்ணப்பக் கட்டணம்:  பொது/ஓ.பி.சி  பிரிவினர்களுக்கு ரூ.1,180 செலுத்தி ஆன்லைன் முறை யில் விண்ணப்பிக்கலாம்.  எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை:  www.nclcil.inஎன்ற  இணையதளத்தில் ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடு தல் விபரங்கள் அறிவிக்கை யில் முழுமையாகத் தரப் பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.nclcil.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி  மார்ச் 5, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.