யுபிஎஸ்சி தேர்விலும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவில் பெரும் மோசடி
19 Jun 2026, 8:58 pm

யுபிஎஸ்சி தேர்விலும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவில் பெரும் மோசடி தகுதியற்றவர்கள் சலுகை பெற்றது அம்பலம் - விசாரணை கமிஷன் அமைக்க கல்வியாளர்கள் கோரிக்கை!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரி களை தேர்ந்தெடுக்கும் தேர்வான சிவில் சர்வீசஸ் தேர்வில் (இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு-யுபிஎஸ்சி) பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு (EWS - இ.டபிள்யு.எஸ்) இட ஒதுக்கீட்டுப் பிரிவில் பெருமளவில் மோசடி நடைபெற்றுள்ளது தற்போது அம்பலமா கியுள்ளது. 2025ஆம் ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவின் கீழ் 104 உயர்சாதி ஏழை மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் தற்போது, சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற இந்த உயர்சாதி ஏழைப்பிரிவு மாணவர்களின் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன.

விதிமுறையும் மீறல்களும்

ஒன்றிய அரசின் விதிமுறைப்படி, ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இ.டபிள்யு.எஸ் பிரிவில் சலுகைகள் பெறத் தகுதியானவர்கள் ஆவர். ஆனால், தற்போது தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் பின்னணி இந்த விதிமுறைக்கு முற்றிலும் மாறாக உள்ளது.

இ.டபிள்யு.எஸ் பிரிவில் வென்ற 104 உயர்சாதி ஏழைகளில், 67 பேர் ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை மிக அதிக கட்டணம் வசூலிக்கும் நாட்டின் புகழ்பெற்ற முன்னணி சிவில் சர்வீஸ் பயிற்சி மையங்களில் படித்துத் தேறியுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 28 மாணவர்களின் பெற்றோர் பெரிய தொழி லதிபர்களாகவும், நிறுவனங்களின் உரிமை யாளர்களாகவும் உள்ளனர். குடும்பத் தொழில் பின்னணி கொண்டவர்கள், பெரிய கடைகளை நடத்தி, வணிகத்தில் கோடிக்கணக்கில் வரு வாய் ஈட்டுபவர்களின் வாரிசுகளும் இந்த உயர்சாதி ஏழைப்பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வெற்றி பெற்ற மாணவர்களில் 10 பேர், பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட முன்னணி தனியார் நிறுவனங்களில் ஏற்கெனவே நல்ல மாத ஊதியத்துடன் பணிபுரிந்தவர்கள் ஆவர். மேலும் 14 மாணவர்கள் இந்தியாவின் மிக உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 46 மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவத்தில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தரம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

கல்வியாளர்களின் கோரிக்கை

இதுதொடர்பாக கல்வியாளர்கள் கூறுகையில், “தனியார் பள்ளி நடத்துவோர், பன்னாட்டு நிறுவன அதிகாரிகள், கோடீஸ்வர தொழிலதிபர்கள் மற்றும் லட்சக்கணக்கில் பள்ளிக் கட்டணமும், பயிற்சி மையக் கட்டண மும் செலுத்தியவர்களின் வாரிசுகள் எப்படி “பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழைகள்” என்ற வரம்பிற்குள் வர முடியும்? உண்மை யான ஏழ்மையை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட இ.டபிள்யு.எஸ் பிரிவில், தகுதி யற்ற பணக்காரர்கள் புகுந்து இத்தகைய மோச டியில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த இ.டபிள்யு.எஸ் முறைகேடு குறித்து உடனடியாக ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும்” என மோடி அர சுக்குத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

நீட், சிபிஎஸ்இ, க்யூட் முறைகேடுகளை தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்விலும் முறைகேடு அரங்கேறியிருப்பது மோடி அரசின் செயல்பாட்டிற்கு தீவிர போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.