தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

25 Mar 2026, 4:19 pm
வாய்ப்பு வாசல்

யுபிஎஸ்சி – யில்  மருத்துவ காலிப் பணியிடங்கள்  135

ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுபிஎஸ்சி (UPSC) Combined Civil Service Exam மூலம் மருத்துவர்களுக்கன 1358  காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் (MBBS) பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். குறிப்பு:  இத்தேர்விற்கு இறுதியாண்டில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் இதர பிரிவினர்களுக்கு அரசு விதிமுறை படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – தகுதியானவர்கள் Combined Civil Service Exam நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு நடைபெறும் நாள் -  ஆகஸ்ட் 2, 2026. விண்ணப்பக் கட்டணம் – இதர பிரிவினர்களுக்கு ரூ. 200. எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை -  இந்தப் பணியிட நிரப்புதல், தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறி விக்கையைப் பெற https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்வை யிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 31, 2026 ஆகும்.

அணு ஆராய்ச்சி மையத்தில் 105 காலிப் பணியிடங்கள்

இந்திய அரசின் அணு ஆராய்ச்சி நிறுவனங்களில் Junior Research Fellow (JRF) பணிக்கான 105 காலிப் பணியிடங்களை நிரப்பிட உள்ளன. இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – Physics / Chemistry / Life Sciences உள்ளிட்ட துறைகளில் B.Sc / M.Scபட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் UGC-CSIR NET / JRF / GATE / ICMR / JEST போன்ற தேசியத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் இதர பிரிவினருக்கு அரசின் விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – இதர பிரிவினர்களுக்கு ரூ.500. எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிட நிரப்புதல், தேர்வு, பாடத்திட்டம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிவிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற https://barcocesexam.in/என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31, 2026.

ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி - 2801

தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கிவரும் தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டீஸ்(தொழில் பழகுநர்) பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிலில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – குறைந்த பட்சம் 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST, OBC மற்றும் இதர பிரிவினருக்கு அரசின் விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை – 10ஆம் வகுப்பு மற்றும் ITI மதிப்பெண்களின் அடிப்படையில் Merit list மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான அறிவிப்பு மற்றும் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். முழுமையான அறிவிக்கையைப் பெற  என்ற https://scr.indianrailways.gov.in/இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 11, 2026.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.