ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிகளில் உயர்சாதியினர் ஆதிக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம்
3 Mar 2026, 3:38 pm
<p><strong>ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிகளில் உயர்சாதியினர் ஆதிக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 3 - ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகளில் உயர் சாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பு செவ்வாயன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமை ஏற்றார். இதில் தி.க.தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை.க.வீரமணி, விசிக செயலாளர் மூர்த்தி, த.பெ.தி.க மாவட்டத் தலைவர் சண்.முத்துக்குமார், ஆதித்தமிழர் பேரவை கார்த்தி, மக்கள் பாதுகாப்பு அமைப்பு கார்மேகம் ஆகியோர் பேசினர். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வேலு. இளங்கோவன், மாநகரத் தலைவர் நாக.சதாசிவம், தி.க.மகளிர் பாசறை மாவட்டத் தலைவர் மு.கிருஷ்ணவேணி, தி.க.மாவட்டச் செயலாளர் ப.குமரவேல், மாநகரத் தலைவர் பா.மா.கருணாகரன், வெள்ளகோவில் ச.மணிகண்டன், நா.சுதன்ராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
