தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யுபிஐ மீதான வரி : திரும்பப் பெறாவிட்டால் கடையடைப்பு

8 Oct 2026, 9:18 pm
யுபிஐ மீதான வரி : திரும்பப் பெறாவிட்டால் கடையடைப்பு

யுபிஐ மீதான வரி : திரும்பப் பெறாவிட்டால் கடையடைப்பு

சென்னை, அக். 8-யுபிஐ பண பரிவர்த்தனைக்கு 0.4விழுக்காடு வரி வசூலிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை சார்பில் சென்னையில் புதனன்று (அக். 7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டிஜிட்டல் இந்தியாவைஊக்குவிப்பதாகக் கூறிவிட்டு, சிறுமற்றும் குறு வணிகர்கள் முழுமையாகயுபிஜ முறைக்கு மாறிய பிறகு, அதன்மீது வரி அல்லது மறைமுக கட்டணங்களை சுமத்த முனையும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வன்மையாகக்கண்டிக்கிறோம். வணிகர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றும் இந்த முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் பெட்டிக்கடைக்காரர்கள், காய்கறி, பூவியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான சிறுவணிகர்கள் மிகக் குறைந்த லாபம்வரம்பிலேயே தொழில் செய்து வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரி விதித்தால், அது வணிகர்களுக்கும்நுகர்வோருக்கும் இடையே தேவையற்ற விலையேற்றம் பதற்றத்தையும் கூடுதல் நிதிச் சுமையையும் உருவாக்கும். எனவே, எந்த வகையிலும் வணிகர்கள் மீது இந்த கட்டணங்களை சுமத்தக் கூடாது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பைப் பராமரிக்கும் செலவினங்களை முழுமையாக ஒன்றிய அரசே மானியமாக வழங்க வேண்டும். வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் பேமண்ட்சேவை நிறுவனங்களின் லாபத்திற்காக,அடிமட்ட வர்த்த அமைப்பை பலிகடா ஆக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். ஏற்கெனவே ஜிஎஸ்டி நடைமுறைகள் மற்றும் பணவீக்கத்தால் சில்லறை வணிகம் கடும் சவால்களை சந்தித்து வரும் நிலையில், யுபிஐ மீதான வரிவிதிப்பு ரொக்கப் புழக்கத்தை மீண்டும்அதிகப்படுத்தி, சில்லறை வர்த்தக வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும். நவீன வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும். இத்தகைய கெடுபிடிகளை ஒன்றிய நிதி அமைச்சகம் உடனடியாகக் கைவிட வேண்டும். ஒன்றிய அரசு இந்த கட்டண வரி விதிப்பு அறிவிப்புகளை திரும்பப் பெறாவிட்டால்,அகில இந்திய வணிகர் அமைப்புகளுடன் கைகோர்த்து, தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் தொடர்மறியல் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.