தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டைப் பையிலும் ஒரு சுங்கச் சாவடியா?

11 Aug 2026, 8:55 pm
சட்டைப் பையிலும் ஒரு சுங்கச் சாவடியா?

சட்டைப் பையிலும் ஒரு சுங்கச் சாவடியா?

யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பதற்கான சட்டப்பூர்வத் தடையை நீக்கும் வகையில், 2007-ஆம் ஆண்டு பி.எஸ்.எஸ் சட்டத்தில் ஒன்றிய அரசுதிருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம்ரூ.2000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.40% வரை வணிகர் தள்ளுபடி கட்டணம் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பால், காய்கறி போன்ற சில்லறைப் பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், மொத்தப் பரிவர்த்தனை மதிப்பில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி இதன் கீழ் வருவதால், ஆண்டிற்கு ரூ.51,000 கோடி முதல் ரூ.81,700கோடி வரை புதிய கட்டணச் சுமை மக்களின் தலையில் சுமத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நமது சொந்தப் பணத்தை நம் சட்டைப் பையிலிருந்து எடுப்பதற்கே தனியாக வரி செலுத்துவதைப் போன்றது இந்த ஏற்பாடாகும். பொதுத்துறை முதலீடுகள்மற்றும்மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பை பராமரிக்கும் பெயரில், தனியார்நிறுவனங்களின் லாபவெறிக்கு ஒன்றிய அரசு துணைபோகிறது. காகித நோட்டு அச்சிடும் செலவு மற்றும் பழையநோட்டுகளை மாற்றும் செலவு மிச்சமாகும் நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கூடுதல் சுமையாகச்சித்தரிப்பது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே என்.பி.சி.ஐ (NPCI) அமைப்பு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வரும் சூழலில், கூகுள் பே, போன் பே போன்ற தனியார் நிறுவனங்கள் மக்களின் பரிவர்த்தனைத் தரவுகளை வைத்துச் செய்யும் கார்ப்பரேட் சுரண்டலைத் தடுத்து நிறுத்தாதஅரசு, கட்டணங்கள் மூலம்மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது அப்பட்டமான மக்கள் விரோதத் தாக்குதலாகும். ஒவ்வொரு இந்தியரின்பரிவர்த்தனை விவரங்களையும் ஒரு சில பெருநிறுவனங்கள் தங்கள் வருமான வாய்ப்பாக மாற்றுவதை வேடிக்கை பார்க்கும் மோடி அரசு,மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு லாப நோக்குடைய கார்ப்பரேட்டுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது கண்டனத்திற்குரியது.

மக்களின் வரிப்பணத்தாலும் பொதுத்துறை முதலீடுகளாலும் உருவாக்கப்பட்ட யுபிஐ கட்ட

மைப்பைத் தனியார் லாபச் சுரண்டல் மற்றும் தரவுச் சுரண்டலில் இருந்து முழுமையாக விடு

விப்பதோடு, வணிகர்களின் மீதும் நுகர்வோரின் மீதும் திணிக்கப்படும் மறைமுக வரிகளையும் சுமை

மிகுந்த கட்டணங்களையும் முற்றிலுமாகக் கைவிட

வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பொதுமக்களைத் தொடர்ச்சியாக டிஜிட்டல்மயமாக்கலுக்குள் தள்ளிவிட்டு, இப்போது அதற்கே சுங்கச் சாவடிஅமைப்பது போன்ற கட்டணங்களை விதிப்பது மோசடியாகும். இந்த மறைமுக வரிகள் நுகர்வோரின் அன்றாட வாங்கும் திறனைக் கடுமையாகப் பாதிப்பதோடு, சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வணிகச் செயல்பாடுகளையும் முடக்கிவிடும்.

பொதுமக்களின் தலையில் கட்டணச் சுமையைச் சுமத்தும் எந்தவொரு மக்கள் விரோத நடவடிக்கையையும் முறியடிக்கத் தொடர் போராட்டங்கள் அவசியமாகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.