யுபிஐ சேவை கட்டண விதிப்பை எதிர்த்து இன்று வணிகர் சங்கங்கள் போராட்டம்
11 Oct 2026, 10:16 pm

யுபிஐ சேவை கட்டண விதிப்பை எதிர்த்து இன்று வணிகர் சங்கங்கள் போராட்டம்

சென்னை, அக்.11 -வணிக யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என ஒன்றிய பாஜக அரசின் அறிவிப்பு, அக்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் யுபிஐ சேவை கட்டண விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (அக்.12) அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய அரசு டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின்படி, வங்கி பணப்

பரிவர்த்தனைகளை இலவச யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு மாற்றி, பொது மக்களிடையே டிஜிட்டல் மயமாக்கலை ஊக்கப்படுத்தி வந்தது. இதை பெருவாரியான மக்கள்பயன்படுத்தி வரும் நிலையில், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் உள்ள யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு அக்.15 முதல் 0.4 சதவீதம் சேவை கட்டணம் விதிப்பதாகவும், அதை வணிகர்கள்தான் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அளவிலும் மிகப்பெரும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது.

யுபிஐ சேவை கட்டணத்தை ஒன்றிய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, தமிழக அளவில் அமைப்பு ரீதியாக உள்ள 61 மாவட்டங்களின் தலைவர்கள் தலைமையில் முக்கிய நகரப் பகுதிகளில் வணிகர்கள் திங்கள்கிழமை அறவழிப் போராட்டம் நடத்த உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

வியாபாரிகள் கவலை

ரூ.3,000 மதிப்புள்ள பொருளை யுபிஐ மூலம் வாங்கினால், வியாபாரியிடமிருந்து சுமார் ரூ.12 வசூலிக்கப்படும். வாடிக்கையா

ளர்களிடம் இக்கட்டணத்தை நேரடியாக வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், செலவை வியாபாரிகளே ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் யுபிஐ பயன்பாடு குறைந்து ரொக்கப் பரிவர்த்தனை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.