தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யுபிஐ செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்

1 Jun 2026, 9:34 pm
யுபிஐ செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்
<p><strong>யுபிஐ செயலியில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்</strong></p><p>சென்னை, ஜூன் 1- யுபிஐயில் நடைபெறும் சில முறை கேடுகளை தவிர்க்க ஒன்றிய அரசு அவ்வப்போது புதிய பாதுகாப்பு அம்சங் களை அறிமுகம் செய்து வருகிறது. டிஜிட்டல் முறையில் தற்போது வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்துவிட்டது. பணம் அனுப்பு வதற்கும் டெபாசிட் செய்வதற்கும் வங்கி களுக்குச் சென்று கால்கடுக்க நின்ற கால மெல்லாம் மலையேறிவிட்டது எனச் சொல்லும் அளவிற்கு தற்போது நிலைமை மாறிவிட்டது. வங்கி பக்கமே போகாமல் பணப் பரிவர்த்தனையை செல்போன் மூலமே செய்து முடித்துவிடலாம். ஆன்லைன் ஷாப்பிங் முதல் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்புவது வரை சில நொடி களில் அனுப்பும் வசதி வந்துவிட்டது. அதிலும் யுபிஐ வந்த பிறகு பெட்டிக் கடை முதல் ஷாப்பிங் மால் வரை அனைத் திலும் எளிதாக பேமெண்ட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் யுபிஐயில் சில முறை கேடுகளும் நடைபெறுகின்றன. இவற்றை தவிர்க்க ஒன்றிய அரசு அவ்வப் போது புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகை யில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களுக்குப் பணம் அனுப்புவதைத் தடுக்கும் பொருட்டு, தேசிய கொடுப்பனவுக் கழகம் ஜூன் 1 முதல் புதிய பாதுகாப்பு அம்சத் தைக் கட்டாயமாக்குகிறது. இதன்படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் ஒரு வருக்குப் பணம் அனுப்பும்போது, பய னர்கள் தங்களது ‘யுபிஐ பின்’ எண்ணை உள்ளிடுவதற்கு முன்பாகவே, பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கில் உள்ள அதிகாரப்பூர்வமான அசல் பெயர் திரை யில் தோன்றும். இதன் மூலம் தவறான நபர் களுக்குப் பணம் மாறுவது முற்றிலும் தடுக்கப்படும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.