காந்தி கிராம பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துக!
13 Jan 2026, 3:17 pm
<p><strong>காந்தி கிராம பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துக!</strong></p>
<p>திண்டுக்கல், ஜன.13 - வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தை முழுமையான மத்தியப் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் ஒன்றிய அரசுக்கு கோரிக் கையை முன்வைத்துள்ளார். திண்டுக்கல்லில் சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இது குறித்து விரிவாகப் பேசினார். கல்வி மேம்பாடு மற்றும் பல்கலைக்கழக அந்தஸ்து 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காந்தி கிராம பல்கலைக்கழகம், இந்தியாவின் 14 சிறந்த கிராமப்புறப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்வதை அவர் சுட்டிக்காட்டி னார். “நாக் (NAAC) குழுவின் ‘ஏ++’ தரச் சான்று பெற்றுள்ள இந்தப் பல்கலைக் கழகம், 55 துறைகளுடன் 197 ஏக்கர் பரப்பள வில் விரிந்து கிடக்கிறது. கென்யா, ருவாண்டா, கானா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்வது இதன் உலகளாவிய தரத்திற்குச் சான்று” என்று அவர் குறிப்பிட்டார். தற்போது ‘நிகர்நிலை’ (Deemed) பல்கலைக்கழகமாக உள்ள இதனை, மத்திய பல்கலைக்கழகமாக மாற்றக் கோரி ஒன்றிய கல்வி அமைச்சருக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த சாதகமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக வும் அவர் தெரிவித்தார். மேலும், அங்கு காலியாக உள்ள 88 பேராசிரியர் பணியிடங் கள் மற்றும் 119 இதரப் பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டியதன் அவசி யத்தையும் அவர் வலியுறுத்தினார். மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் உள்கட்ட மைப்பை மேம்படுத்த சச்சிதானந்தம் எம்.பி. முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்: * போக்குவரத்து: திண்டுக்கல் மாநக ரத்திற்குப் புதிய புறநகர் பேருந்து நிலை யம் அமைத்தல். * குடிநீர்: வைகை குடிநீர் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, காவிரி மற்றும் வைகை நீரை மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்லுதல். * ரயில்வே: திண்டுக்கல் – காரைக்குடி புதிய ரயில் பாதை, கோவை – சென்னை இடையே திண்டுக்கல் வழியாகப் பகல் நேர ரயில் சேவை மற்றும் கொடைரோடு, அம்பாத் துரை ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள். * சாலைகள்: திண்டுக்கல் – குமுளி நான்கு வழிச்சாலை மற்றும் கொடைக்கா னல் – மூணாறு இணைப்புச் சாலைத் திட்டங் களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றார். பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் நலன் பழங்குடி கிராமங்களில் அடிப்படை வசதி கள் இல்லாததால், நோயாளிகளை ‘டோலி’ கட்டித் தூக்கிச் செல்லும் அவலநிலை தொடர்வதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைச் சீரமைக்க ஒன்றிய, மாநில அரசு கள் போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், ‘புலையர்’ இன மக்களை மீண்டும் எஸ்.டி. (ST) பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். விவசாயிகள் நலன் குறித்துப் பேசுகை யில், “மழையினால் சேதமடைந்த நெல்லுக்கு 22% ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக் கையை ஒன்றிய அரசு நிராகரித்தது கண்டிக்கத் தக்கது. எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்து ரைகளை ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என ஆர். சச்சி தானந்தம் எம்.பி., கேட்டுக் கொண்டார்.</p>
