தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக இளைஞருக்கு உத்தரபிரதேச இளைஞர் ஸ்டெம்செல் தானம் அரசு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்ட இளைஞர்

23 Jul 2026, 11:53 pm
தமிழக இளைஞருக்கு உத்தரபிரதேச  இளைஞர் ஸ்டெம்செல் தானம்  அரசு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்ட இளைஞர்

தமிழக இளைஞருக்கு உத்தரபிரதேச இளைஞர் ஸ்டெம்செல் தானம் அரசு மருத்துவமனையில் காப்பாற்றப்பட்ட இளைஞர்

சென்னை,ஜூலை 23- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர் ஒரு முகமில்லா முகவரி... அந்நிய மனிதர்... ஆனால் இன்று, தன் உடலுக்குள் ஓடும் குருதியிலும், வாழ்வின் ஒவ்வொரு சுவாசத்திலும் நிறைந்து நிற்கும் சொந்தச் சகோத ரன்! உயிருக்கு ஆபத்தான அரிய இரத்த நோயிலிருந்து மீண்டு வந்த சென்னை யைச் சேர்ந்த சாம்னு ஜான் (40) எனும் தனியார் நிறுவன ஊழியரும், அவருக்கு புது வாழ்வு தந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரிதோஷ் மிச் (25) எனும் இளைஞரும் முதன் முறையாக நேரில் சந்தித்தபோது, அங்கு வார்த்தைகள் மௌனமாயின; இருவரின் கண்களிலும் வழிந்த ஆனந்தக் கண்ணீரே அவர்களின் நன்றி யையும் அன்பையும் பரிமாறிக் கொண்டது.

இருள் சூழ்ந்த போராட்டக் காலம்

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விளக்கிச் சொல்ல முடியாத காய்ச்சல், அலர்ஜி, கடுமையான சோர்வு என சாம்னுவின் வாழ்க்கை ஒரு போராட்ட மாகவே கழிந்தது. இரு வேலைகளை இழந்து, குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயத்தோடும் வேதனையோடும் நாட்களை நகர்த்தி னார். 2022 ஜனவரியில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் பரிசோதித்தபோதுதான், அவருக்கு ‘ Severe Aplastic Anemia’ என்ற அரிய ரத்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எலும்பு மஜ்ஜை முற்றிலும் செயலிழந்து, புதிய ரத்த அணுக்களை உருவாக்க முடியாத நிலை. ‘ஸ்டெம் செல்’ மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவரைக் காப்பாற்ற ஒரே வழி என்ற சூழலில், குடும்பத்தினரின் ரத்த மாதிரி பொருந்தாமல் போக, சாம்னு வின் வாழ்வு இருளில் மூழ்கியது.

18 மாத காத்திருப்பு

18 நீண்ட மாதங்கள்... மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு சாம்னுவும் அவரது குடும்பமும் ஏதாவது ஒரு அதிசயம் நடந்துவிடாதா என காத்தி ருந்தனர். அப்போதுதான் ‘டிகே எம்எஸ் ஃபவுண்டேஷன் இந்தியா’ அமைப்பின் மூலம் புதுடெல்லியைச் சேர்ந்த 25 வயதான பரிதோஷ் மிச்சின் ஸ்டெம் செல், சாம்னுவுக்கு நூறு சதவீதம் பொருந்துவது கண்டறியப் பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அருணா ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழு வினர், வெற்றிகரமாக அந்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையைச் செய்து சாம்னுவிற்குப் மறுவாழ்வு அளி த்தனர். சிகிச்சை முடிந்து இரு ஆண்டுகள் கடந்து, முற்றிலும் குண மடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சாம்னு, ஜூலை 22 அன்று தன் உயிர் காப்பாளரான பரிதோஷை நேரில் சந்தித்தார். உத்தரபிரதேசத்தில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த பரிதோஷை கட்டித் தழுவியபோது சாம்னுவின் கண்கள் கலங்கின. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் உள்ள நோயாளிகளுக் குப் பொருத்தமான நன்கொடையா ளர்களைக் கண்டுபிடிப்பதில் மரபணு சார்ந்த பல்வேறு சவால்கள் இருப்ப தாகக் குறிப்பிடும் ‘டிகேஎம்எஸ் ஃபவு ண்டேஷன் இந்தியா’ அமைப்பின் நிர்வாகத் தலைவர் பேட்ரிக் பால், அதிக ப்படியான இளைஞர்கள் முன்வந்து ஸ்டெம் செல் கொடையாளர்களாகப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டு க்கொண்டார். மருத்துவர் அருணா ராஜேந்திரன் குறிப்பிடுகையில், “சாம்னு முழு மையாக மீண்டு வந்தது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இன்னும் எத்த னையோ நோயாளிகள் தங்களுக் குப் பொருத்தமான கொடையாளர் கள் கிடைக்காமல் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இதற்கான விழிப்புணர்வு சமூகத்தில் பெருக வேண்டும்” என்றார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இந்த அறுவைசிக்சை இலவசமாக செய்யப் பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை என்றால் 30 லட்சம் ரூபாய் செலவாகி யிருக்கும் என்று அவர் கூறினார். மேலும் ஸ்டெம் செல் குறித்த தனி சிறப்பு மையமாக சென்னை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) தேர்வு செய்து ரூ.15 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு மனிதர்கள், இரு வேறு மாநிலங்கள் ஆனால், குருதியால் பிணைக்கப்பட்ட இந்த உணர்ச்சிப் பூர்வச் சந்திப்பு, ‘ஸ்டெம் செல் தானம்’ என்பது ஒரு எளிய விஷயம் மட்டு மல்ல; அது ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்து, மற்றொரு மனிதனுக்கு வாழ்வளிக்கும் மகத்தான புனிதப் பணி என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.