தீக்கதிர் முக்கிய செய்திகள்
27 Oct 2026, 10:17 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

டைனிக் பாஸ்கர் நாளிதழ்

உத்தரப் பிரதேசத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், பயிற்சி வகுப்புக் கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளைச் சமாளிப்பதற்காகத் தங்கள் ரத்தத்தை விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில் பணத்திற்காக ரத்தம் விற்பனை செய்வது சட்டப்படி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

உச்சநீதிமன்றம்

புனையப்பட்ட கதைகள் மூலம் அப்பாவி மக்களை சிறையில் அடைக்கும் வழக்கம் உத்தரப்பிரதேசத்தில் (பாஜக ஆளும்) தீவிரமாக உள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாக 6 ஆண்டுகள் சிறையில் வாடியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு

ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற முழக்கத்தின் கீழ் நடைபெற்ற போராட்டங்கள்தான் பாஜகவை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஊழலைத் தழுவிக்கொண்டது ; அரசியல் சாசன அமைப்புகளை கட்டுப்படுத்தியது ; வாக்காளர் பட்டியல்களையும் முறைகேடு செய்துள்ளது. அதனால் பாஜக ஆட்சியை விட்டு அகற்றப்படும் நேரம் வந்துவிட்டது.

நாட்டுப்புறப் பாடகி நேஹா சிங் ரத்தோர்

அரசுக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்க, தில்லி ஜந்தர் மந்தரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள அரசு, அருணாச்சலில் நிகழ்ந்த வன்முறை மற்றும் எல்லைப் பதற்றப் பிரச்சனையில் மௌனம் சாதிக்கிறது.