முந்தய பக்கம்

உ.பி.,யில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் : லக்னோவில் பதற்றமான சூழல்

24 Jul 2026, 9:09 pm
உ.பி.,யில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் : லக்னோவில் பதற்றமான சூழல்

உ.பி.,யில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் : லக்னோவில் பதற்றமான சூழல்

லக்னோ நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், தில்லி யில் மாணவர்கள் - இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குத லுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வரு கிறது. வியாழனன்று தொடங்கிய இந்த போராட்டங்களில் இந்திய மாணவர் சங்கம் உட்பட பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் ஆஷா பணியாளர்கள் இணை ந்து மோடி அரசுக்கு எதிராக முழக்கங் களை எழுப்பினர். லக்னோ, காசிப்பூர், வாரணாசி, பாலியா, ஆசம்கர் ஆகிய இடங்களில் வியாழன், வெள்ளி என 2 நாட் களாக தொடர் போராட்டம் நடைபெற்று வரு கிறது.

பதற்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பீம் ஆர்மி செயற்பாட்டாளர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டு, ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர். அப்போது பீம் ஆர்மிக்கும், காவல்துறைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தடியடி நடத்தி மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் லக்னோவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram