பாஜக எம்எல்ஏக்கள் ரகளையால் உ.பி., சபாநாயகர் கடும் அதிருப்தி மைக்கை ஓங்கி அடித்துவிட்டு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்
14 Feb 2026, 4:00 pm
<p><strong>பாஜக எம்எல்ஏக்கள் ரகளையால் உ.பி., சபாநாயகர் கடும் அதிருப்தி மைக்கை ஓங்கி அடித்துவிட்டு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்</strong></p>
<p>லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தின் சட்ட மன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் “இந்தியா” கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ராகினி சோங்கர் (பெண்), மாநிலத்தில் நிலவும் இளைஞர்களின் பிரச்ச னைகள் குறித்து பேசிக்கொண்டி ருந்தார். அப்போது ராகினி சோங்க ரை பேச விடாமல், கேதகி சிங் உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர் சதீஷ் மகாலா, தனது சொந்தக் கட்சியினரையே (பாஜக) கடுமையாகச் சாடினார். குறிப்பாக, கேதகி சிங்கிடம்,”அவையை நீங்கள்தான் நடத்தப் போகி றீர்களா?” என கோபமாக கேள்வி யை முன்வைத்தார். இந்த கேள்வியை கேதகி சிங் உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டு கொள்ளாததால், ஆத்திரமடைந்த சபாநாயகர், தனது மைக்-கை மேசையில் ஓங்கி அடித்துவிட்டு, அவையை ஒத்திவைப்பதாக கூறி சட்டமன்றத்தை விட்டு வேகமாக வெளியேறிச் சென்றார். உத்த ரப்பிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியின் ஒழுங்கற்ற நடத்தையைக் கண்டு அதிருப்தி யடைந்த சபாநாயகரின் இந்த செயல் நாட்டில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.</p>
