உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சரியாகப் படிக்காமல் பெண் பட்டதாரியைக் கைது செய்ய முயன்ற உ.பி. பாஜக அரசு?
25 Sept 2026, 10:55 pm

உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சரியாகப் படிக்காமல் பெண் பட்டதாரியைக் கைது செய்ய முயன்ற உ.பி. பாஜக அரசு?

புதுதில்லிபாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா தொழிற்பேட்டையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு கோரி ஏப்ரல் 10 முதல் 18 வரை போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இந்தப் போராட்ட விவகாரம் தொடர்பாக, தில்லி பல்கலைக்கழகப் பட்டதாரி அகிருதிசௌத்ரி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அகிருதிக்கு ரூ.5 லட்சம்நிவாரணம் வழங்க உத்தரவிட்டதோடு, கௌதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து இந்தத் தொகையை வசூலிக்க வேண்டும் என்றும்கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம்மற்றும் உ.பி. அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, என்.கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் மற்றும் பிறஅதிகாரிகளுக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பத்திகள் 27 முதல் 33 வரை உள்ள பகுதிகளுக்கு மட்டும்இடைக்காலத் தடை விதித்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் அகிருதி சௌத்ரியின் தேசியப் பாதுகாப்புச் சட்டக் காவலை ரத்து செய்து அளித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் எவ்விதத் தடையும் விதிக்கவில்லை.அதிகாரிகளுக்கு எதிரானகண்டனங்களுக்கும், அவர்களின் சம்பளத்தில் இருந்து தொகையை வசூலிக்க விதிக்கப்பட்ட உத்தரவுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்தத் தீர்ப்பைச் சரியாகப் படிக்காமல் உத்தரப்பிரதேசக் காவல்துறை அகிருதி சௌத்ரியை மீண்டும்கைது செய்யமுயன்றதாகச் செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆனால், இதற்கு உத்தரப்பிரதேச பாஜக அரசு மறுப்புதெரிவிக்கவில்லை.