தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உ.பி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 17 கோடி ரூபாய் போலி நோட்டுகள் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ; வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

2 Sept 2026, 8:47 pm
உ.பி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 17 கோடி ரூபாய் போலி நோட்டுகள் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ; வங்கி அதிகாரிகளிடம்  தீவிர விசாரணை

உ.பி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 17 கோடி ரூபாய் போலி நோட்டுகள் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி ; வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

லக்னோவ்உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) பிரதான கரன்சி பெட்டகத்தில் (பணம் சேமித்து வைக்கும் இடம்)சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதுடன் வங்கியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, வங்கியின் 3 உயர் அதிகாரிகளை நிர்வாகம் உடனடியாக இடைநீக்கம் செய்துஉத்தரவிட்டுள்ளது. மேலும்,இச்சம்பவம் குறித்து விசாரிக்கக் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.

சஹாரன்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து ஜெய்ப்பூரில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) மையத்திற்கு அண்மையில் பணம்அனுப்பப்பட்டது. அங்கு பணத்தைச் சரிபார்த்தபோது, அனுப்பப்பட்ட தொகையில் பணப் பற்றாக்குறை இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், சஹாரன்பூர் வங்கியின் கரன்சி பெட்டகத்தில்கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் நேரடித் தணிக்கை (Audit) நடத்தினர்.தணிக்கையின் போது, 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 148 போலி பணக்கட்டுகள் முதல்கட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.7.40 கோடியாகும். தணிக்கை தொடர்ந்து நடைபெற்றநிலையில், கரன்சி பெட்டகத்தில் இருந்த போலி நோட்டுகளின் மொத்த மதிப்பு 17 கோடி ரூபாய் என்ற அளவைஎட்டியது.

வங்கி பெட்டத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு பகுதிநேர பணியாளராக வேலை செய்து வந்தவிஷால் குமார் என்பவர், அசல் பணக்கட்டுகளில் இருந்து நோட்டுகளை உருவி எடுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.வங்கித் தலைமைமேலாளர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் 3 வங்கி மேலாளர்கள் மற்றும் பகுதிநேரப் பணியாளர் விஷால் குமார் ஆகிய 4 பேர் மீது குற்றவியல்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஷால் குமார் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோட்ட மேலாளர் ரவி குமார் கன்சே, கரன்சி பெட்டகமேலாளர் சுஷீல் குமார் சர்மா, ஹரியானா கிளையின் கரன்சி பெட்டக மேலாளர் அமித் குமார் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த போலி நோட்டு கும்பலின் பின்னணி குறித்து விசாரிக்கத் தற்பொழுது சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)அமைக்கப்பட்டுள்ளது. வங்கியில் போலி நோட்டுகளை மாற்றியது யார்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் கும்பலுக்குத் தொடர்புள்ளதா? என்ற விசாரணை உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரகண்டிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) தனியாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.