முந்தய பக்கம்

உ.பி: நீட் மறுதேர்வு எழுதிய மாணவி தற்கொலை!

4 hours before
உ.பி: நீட் மறுதேர்வு எழுதிய மாணவி தற்கொலை!

நீட் மறுதேர்வை எழுதிய சில நாட்களிலேயே, உத்தரப் பிரதேசத்தில் சஞ்சல் பாரதி என்ற 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் சௌபாரியா கஞ்சன்புரா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சல் பாரதி கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடந்த நீட் மறுதேர்வை எழுதியுள்ளார். அவர் நேற்று ​​வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்ட அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நீட் மறுதேர்வை எழுதிய பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். மாணவி தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து நீட் வினாத்தாள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் "என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, என் சகோதரா" என்று எழுதப்பட்டிருந்ததாகவும், அந்த தற்கொலை குறிப்பு கையெழுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோட்வாலி காவல் நிலைய அதிகாரி (SHO) நிர்பய் சிங் தெரிவித்துள்ளார். மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram