முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

1 Jun 2026, 9:11 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மூத்த தலைவர் சுபாஷினி அலி

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் கொலை வழக்குகள், காவல்துறை என்கவுண்டர்கள் மிகவும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. அதாவது உத்தரப் பிரதேசத்தில் உத்தமமான நீதி முறை உள்ளது. மாநிலத்தில் சட்டம் , நீதி சமமாக நிலைநாட்டப்படவில்லை.

பத்திரிகையாளர் அஞ்சனா ஓம் காஷ்யப்

நீட் வினாத்தாள் கசிவால் கல்வியை வியாபாரமாக்கியவர்கள் சிரமப்படுகிறார்கள். இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் இந்த கோச்சிங் மாபியாக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வினாத்தாள் கசிவில் அவர்களுக்கு தொடர்பு இல்லாமல் இல்லை.

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் வெப்ப அலை பாதுகாப்பு பற்றி பேசினார். ஆனால் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ குளறுபடிகள், கியூட் தேர்வினால் ஏற்பட்ட பேரழிவு விளைவுகள் குறித்து ஒரு வார்த்தை கூட கவலை தெரிவிக்கவில்லை? நாட்டில் அனைத்தும் உண்மையில் சுமூகமாகத்தான் இருக்கிறதா என்று மக்கள் சந்தேகிப்பதில் நியாயம் இருக்கிறதுதானே?

பத்திரிகையாளர் சஞ்சய் கே. ஜா

நாட்டில் ஊழல் நிறைந்த ஊடகம் பயங்கரவாதத்தை விடவும் மிகவும் ஆபத்தானது. பத்திரிகையியல் என்ற பெயரில் பொய்களையும் வெறுப்பையும் பரப்புபவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தரகர்களாகச் செயல்படுபவர்கள், ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருப்பவர்களை என்ன செய்யப் போகிறோம்? மனிதாபிமா னத்தையும் நெறிமுறைகளையும் கொன்று இந்த மனிதர்கள் தங்களது கஜானாக்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram