முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

3 Jun 2026, 8:33 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் முகமது ஜூபைர்

வெப்ப அலைகளின் போது இந்தியாவின் மிக அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுத்துள்ளது. 5 நாட்களில் 8,056 உயிரிழப்புகள் அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளரை இடமாற்றம் செய்தும், ‘மதிப்பெண் பதிவேற்ற’ குளறுபடி குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தும், அரசு நமது கண்களில் மண்ணைத் தூவுகிறது. கல்வி அமைச்சர் ஏன் பதவி விலகவில்லை? தவறுக்கு பொறுப்பேற்க பாஜகவுக்கு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது?

எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி

சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் உண்மையான குற்றவாளியான தர்மேந்திர பிரதான் தப்பித்துக்கொண்டார். இது பொறுப்புடைமை அல்ல. இது ஒரு மூடிமறைப்பு நடவடிக்கை.

ஐ.எம்.எப் முன்னாள் அதிகாரி கீதா கோபிநாத்

கச்சா எண்ணெய் விலை மிக விரைவாக முழுமையாகக் குறைந்துவிடாது. ஒரு பேரலுக்கு 70 அல்லது 75 டாலர் அளவிற்குக் கீழ் இறங்குவதற்கு 2027 இல் 6 மாதங்களாவது கடக்கும். தற்போது சர்வதேச நாணய நிதியத்தால் 6.5% ஆகக் கணிக்கப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மேலும் குறைந்து 6%-க்கு வரக்கூடும்.

Share
FacebookXWhatsAppTelegram