உ.பி.,யில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலி
29 May 2026, 8:12 pm

உ.பி.,யில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் வியாழனன்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பெட்வா ஆற்றின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் லோகேந்திரா (22), குல்தீப் நிஷாத் (19), சவந்த் யாதவ் (28), சபாஜீத் (30), புஷ்பேந்திர சவுகான் (34) மற்றும் ராஜேஷ் பால் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கோர விபத்து தொடர்பாக ஹமிர்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் கூறுகையில், “தொழி லாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, ஸ்லாப்களில் ஒன்று அவர்கள் மீது சரிந்து விழுந்ததே விபத்துக்கு காரணம் ஆகும்.

ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் மீட்புப் பணியில் எந்த சிக்கலும் இல்லை” என அவர் கூறினார்.