ரூ.500 கோடி மதிப்புள்ள முஸ்லிம் பல்கலைக்கழக நிலத்தை ஆக்கிரமித்த உ.பி. பாஜக அரசு
yesterday

ரூ.500 கோடி மதிப்புள்ள முஸ்லிம் பல்கலைக்கழக நிலத்தை ஆக்கிரமித்த உ.பி. பாஜக அரசு

லக்னோஉத்தரப்பிரதேச மாநிலத் தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக கோரக்பூர் மடத்தின் சாமியார் ஆதித்யநாத் உள்ளார்.இந்நிலையில், நாட்டின் முக் கிய பல்கலைக்கழகங்களில் ஒன் றான உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரில் உள்ள அலிகார் முஸ் லிம் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.8 ஏக்கருக்கும் அதிகமான முதன்மை நிலத்தில் அம்மாநில அரசு வேலி அமைத்துள் ளது. மாநகராட்சி அதிகாரிகள் எவ் வித முன்னறிவிப்புமின்றி அந்த இடத்தில் அறிவிப்புப் பலகையை நிறுவியுள்ளனர். இதனால் துணைவேந்தர் பேராசிரியை நைமா காத்துன் தலைமையிலான அலிகார் முஸ்லிம்பல்கலைக்கழகக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து நைமா காத்துன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:“அலிகார் மாநகராட்சியின் இந்த நடவடிக்கை தேவையற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். நாட்டின் உயர்கல்வியின் வரலாற்று மையத்திற்குச் சட்டப்பூர்வமாகச் சொந்தமான ஒரு நிலத்தை பலவந்தமாக ஆக்கிரமிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. எங்கள் உரிமையை நிரூபிக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. அதனால் இதனை எதிர்த்து அலிகார் பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் போராடும்” என அவர் கூறினார்.