பாஜக ஆளும் உ.பி.,யில் 289 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
14 Jul 2026, 9:15 pm

பாஜக ஆளும் உ.பி.,யில் 289 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

ஒருவர் குற்றம் செய்தால் அவரை கைது செய்து, சட்டத்தின்படி நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை பெற்றுத் தருவதே அர சாங்கம் மற்றும் காவல்துறையின் பணி ஆகும்.

ஆனால் பாஜக ஆளும் மாநிலங்க ளில் நிலைமை அப்படி அல்ல. சட்டம் - ஒழுங்கை கையாள தெரியாமலும், அதுதொடர்பான விமர்சனங்களை மறைக்கவும் குற்றவாளிகளை என் கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லும் அடாவடி செயல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

கோரக்பூர் மடத்தின் சாமியார் ஆதித்யநாத் முதல மைச்சராக இருக்கும் உத்தரப்பிர தேசத்தில் என்கவுண்டர் என்பது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது.

அம்மாநில அரசாங்க புள்ளி விவ ரங்களின்படி, ஆதித்யநாத் முதல மைச்சரான கடந்த 9 ஆண்டுகளில் உத்த ரப்பிரதேசத்தில் 17,043 என்கவுண்டர் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் 289 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

11,834 பேர் காயமடைந்துள்ளனர். குற்றவாளிகளின் தாக்குதலில் 18 காவல்துறையினர் உயிரி ழந்துள்ளனர் என எதில் கூறப் பட்டுள்ளது.