உ.பி. கணினி பயிற்சி மையத்தில் தீ விபத்து : மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான துயரம்!
yesterday

உ.பி. கணினி பயிற்சி மையத்தில் தீ விபத்து : மாணவர்கள் உட்பட 15 பேர் பலியான துயரம்!

லக்னோ, ஜூன் 22 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 15 பேர் உடல் கருகி பலியாகினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வட மேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதி யில் உள்ள உஷா மேத்தா மார்க்கில் கணினி பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இங்கு மின்கசிவு காரணமாக திங்களன்று பிற்பகல் 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டட த்தின் மேல் தளத்தில் முதலில் தீப்பிடித்து, பின்னர் அது மற்ற இடங்களுக்கும் பரவியது. தகவல றிந்ததும் காவல்துறை, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இருப்பினும் தீ கட்டடம் முழு வதும் பரவியது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் சிலர் மாணவர்கள் என்று கூறப்படு கிறது.