உழைப்போர் குரல்வளையை நெரிக்கும் உபி பாஜக அரசு
14 May 2026, 8:50 pm

உழைப்போர் குரல்வளையை நெரிக்கும் உபி பாஜக அரசு

உத்தரப் பிரதேசத்தில் தங்களின் நியாய மான உரிமைகளுக்காகப் போராடிய நொய்டா தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் ஆதித்யநாத் அரசு, தற்போது அதற்கு ஆதரவாக நின்ற இடது சாரி சிந்தனையாளர்களையும், ஊடகவியலா ளர்களையும் குறிவைத்து ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் சிறையிலடைத்துள்ளது. ‘மஸ்தூர் பிகுல் தஸ்தா’ அமைப்பைச் சேர்ந்த மாணவச் செயல்பாட்டாளர் அகிருதி சௌத்ரி, மூத்த பத்திரிகையாளர் சத்யம் வர்மா ஆகி யோர் மீது பாய்ந்துள்ள இந்த எதேச்சதிகாரச் சட்டம், உபி அரசின் பாசிச முகத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

இதுவரை 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆய்வா ளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த இருவர் மீது மட்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பதன் பின்னணியில் ஒரு அப்பட்டமான சதி ஒளிந்துள்ளது. இவர்க ளின் பிணை மனுக்கள் நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்து, காவல்துறை வசம் எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியான அடுத்த நாளே (மே 13) இந்த கொடூரச் சட்டம் ஏவப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை முடக்கி, சட்டப்பூர்வமான பிணையைத் தடுக்கும் நோக்குடனே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கைதுக்கான காரணங்களைக்கூட வழக்கறிஞர்களுக்குத் தராமல், அரசியல மைப்புச் சட்டப் பிரிவு 22 வழங்கும் அடிப்படை உரிமைகளை உபி காவல்துறை காலில் போட்டு மிதித்துள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை க்குத் துணைபோகும் பாஜக அரசு, தொழிலா ளர்களின் வர்க்கப் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறது. உழைப்பவர்களின் அவலங்க ளை தொடர்ந்து எழுதிவந்த ‘மஸ்தூர் பிகுல்’ இதழின் ஆசிரியர் சத்யம் வர்மா மீதான இந்தத் தாக்குதல், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். ஏற்கெ னவே சித்திக் கப்பான் போன்ற பல பத்திரிகையா ளர்களைச் சிறையிலடைத்த ஆதித்யநாத் அரசு, இப்போது தொழிலாளிகளின் போராட் டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் சுதந்திர மான பத்திரிகையாளர்களை ஒடுக்கப் பார்க்கிறது. கடந்த காலங்களில் அலகாபாத் உயர்நீதி மன்றமே உத்தரப்பிரதேச அரசின் தேசிய பாது காப்புச் சட்ட அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய பின்னரும், பாஜக ஆட்சியாளர்கள் திருந்தவில்லை.

பத்திரிகைத் தொழில் என்பது குற்றமல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திர உரிமையை தந்துள்ளது. உபி அரசு உடனடியாக இந்த அடக்குமுறையைக் கைவிட்டு, சத்யம் வர்மா, அகிருதி சௌத்ரி உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். ஒடுக்குமுறைகள் மூலம் வர்க்கப் போராட்டத்தின் நெருப்பை ஒருபோதும் அணைத்துவிட முடியாது!