உ.பி-யில் வாகனங்கள் மோதி தீ விபத்து - 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
27 Apr 2026, 11:00 am

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பக்ரைச் புறவழிச்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில், இரண்டு ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இயந்திரங்களை ஏற்றி வந்த லாரி, சிமெண்ட் ஏற்றிய டிரெய்லர் மற்றும் ஒரு பிக்கப் வாகனம் ஆகிய மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

பஞ்சாப் பதிவெண் கொண்ட லாரி, லக்னோ பதிவெண் கொண்ட பிக்கப் வாகனத்தை தவிர்க்க முயன்றபோது, எதிரே வந்த ஹரியானா பதிவெண் கொண்ட சிமெண்ட் டிரெய்லருடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த மோதலின் தாக்கத்தில் லாரி மற்றும் டிரெய்லரின் முன்பகுதிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. தீ வேகமாகப் பரவியதால், கேபினுக்குள் இருந்த ஓட்டுநர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இதனால், இரு ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிருடன் எரிந்து பலியாகினர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர், வாகனங்களின் பாகங்களை இயந்திரங்களின் உதவியுடன் வெட்டி அகற்றிய பிறகே சடலங்களை மீட்டனர்.