முந்தய பக்கம்

உ.பி., கோர விபத்து 8 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

6 May 2026, 8:43 pm
உ.பி., கோர விபத்து 8 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

உ.பி., கோர விபத்து 8 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் ஞாயி றன்று காலை ஜலால்பூர் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களுக்கு உதவ உடனடி யாக அங்கு திரண்டனர். அவர்கள் முதலுதவி செய்துகொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் காயமடைந்த 10 பேரில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். செவ் வாயன்று மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கேள்விப்படாத விபத்து

அம்பேத்கர் நகரில் நடந்த விபத்து மிக வித்தியாசமானது. இதுவரை கேள்விப்படாதது. 2 பேரை காப்பாற்றப் போய் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத் தில் சிக்கிய நபர்களை சாலை அருகே தூக்கிச் செல்லாததே இந்த கோர விபத்திற்கு முக்கியக் காரணம் ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram