சிபிஎம் தலைவர்கள் நினைவு கொடிக்கம்பம், கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி
9 Nov 2025, 2:37 pm
<p><strong>சிபிஎம் தலைவர்கள் நினைவு கொடிக்கம்பம், கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, நவ.9- சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முதல், அரசியல் தலைமைக்குழு வரை உறுதியான லட்சிய பயணத்திற்கு உதாரணமான தோழர்.பி. ராமச்சந்திரன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியக்குழு சார்பில், வெள்ளி அன்று தோழர் பி. ராமச்சந்திரன் நினைவு கல்வெட்டு திறப்பு மற்றும் தோழர். பி. கந்தசாமி நினைவு கொடிக்கம்பம் நடும் நிகழ்ச்சி புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் அருமைதாஸ் தலைமை வகித்தார். தோழர். பி. ராமச்சந்திரன் நினைவு கல்வெட்டை மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் திறந்து வைத்தார். நினைவு கொடிக் கம்பத்தில் மூத்த தோழர் கே.வி.எஸ். இந்துராஜ் கொடியேற்றினார். மூத்த தோழர்கள் லூர்துசாமி, தங்கராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன், மல்லிகா, ரஜினிகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.</p>
