தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மலையடிவார கிராமத்தை சுற்றி தீண்டாமை சுவர்

22 Sept 2026, 11:57 pm
மலையடிவார கிராமத்தை சுற்றி தீண்டாமை சுவர்

மலையடிவார கிராமத்தை சுற்றி தீண்டாமை சுவர்

சேலம், செப்.22-ஓலைப்பட்டி மலையடிவார கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதிமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே ஓலைப்பட்டி மலையடிவார கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டியலின குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலையை, மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் ஆதிக்கசாதி மனப்பான்மையோடு, சாலையை மறித்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி அப்பகுதியினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று புகார் அளித்தனர்.

மேலும், சாலை வசதி இல்லாததால் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை காலி செய்து வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், தற்போது வசிக்கும் மக்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, மூன்று தலைமுறைகளாக இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். நீண்ட காலமாக சென்று வந்த பாதையை தனிநபர் ஒருவர் மறித்து தீண்டாமை சுவர் கட்டி எழுப்பியுள்ளனர். எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த வழியாக தாழ்த்தப்பட்ட மக்கள் வந்தால் வீட்டுமனைகளை இடைநிலை சாதியினர் வாங்க மாட்டார்கள் என கூறி தீண்டாமை சுவரைக் கட்டி உள்ளனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் அவசர மருத்துவ தேவைகளுக்கு கூட செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் உடனடியாக தீண்டாமை சுவரை அகற்றி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.