தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சாலை அமைப்பு சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் வெற்றி
29 Sept 2026, 9:28 pm

தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சாலை அமைப்பு சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் வெற்றி

சேலம், செப். 29-சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் ஓலைப்பட்டி பஞ்சாயத்து வாழதாசன்பட்டி அருகில் உள்ள ஏ.ஆர்.காலனி எனப்படும் ராமன் காலனி அருந்ததியர் மக்கள் நான்குதலைமுறையாகப் பயன்படுத்திய சாலையை மறித்துத் தனியார் வீட்டுமனை விற்பனையாளர்கள் சார்பில் நீண்ட சுவர் அமைக்கப்பட்டது.மேலும், அருந்ததியர் மக்கள் குடியிருப்புக்கு அருகில் இருந்த மற்ற சமூகத்தினர் மட்டும் செல்ல சுவரின் நடுவே நுழைவாயில் அமைத்து அவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட னர். ஆனால், அருந்ததியர் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், இந்தச் சுவரின் நடுவே கதவு அமைத்து அதில் மற்ற பகுதி சமூக

மக்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சம்பந்தப்பட்ட பட்டியலின மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன்காரண மாக நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டனர். இதுகுறித்த செய்தி ‘தீக்கதிர்’ நாளிதழில் விரிவாக வெளிவந்தது. இதனையடுத்து, உடனடியாகச் சேலம்மாவட்டத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைக் கேட்டறிந்தனர். மேலும் ஆட்சியர் மற்றும்வருவாய் அலுவலரிடம் பட்டியலினமக்களுக்கு சாலை வசதிசெய்து தரக்கோரி தொடர்ந்துவலியுறுத்திவந்தனர்.இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்திற்குத் திங்களன்று நேரில் சென்று ஆய்வு நடத்திய அதிகாரி கள், பிரச்சினைக்குரிய சுவரின்நுழைவாயிலை அகற்றி மண் சாலை அமைத்துள்ளனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சிகாலங்காலமாகப் பயன்படுத்தி வந்த சாலையை மறித்துச் சுவர் எழுப்பி தங்களை இழிவுபடுத்திய வர்களுக்கு அரசு அதிகாரிகளும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் எனவும், 108 வாகனம் வர முடியாதநிலையில் இருந்து இனி மருத்துவமனைக்குச் செல்லலாம் எனவும், பள்ளி மாணவர்கள் எளிதில் சென்று வர உதவியாக இனி இந்தப் பாதை இருக்கும் எனவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்வில்மேச்சேரி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி. மணிமுத்து உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.