ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை
9 Feb 2026, 3:02 pm
<p><strong>ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை</strong></p>
<p>சென்னை, பிப். 9- அமைப்புசாரா தொழில்களின் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் ராயபுரம் பகுதி 15ஆம் ஆண்டு பேரவை கூட்டம் தலைவர் எம்.ஜாவித் தலைமையில் தோழர் வீரஅருண் நினைவரங்கில் நடைபெற்றது. துணைத்தலைவர் என்.குமார் செங்கொடியை ஏற்றினார். துணைச் செய லாளர் பி.கண்ணன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாவட்டச் செய லாளர் எம்.ஜாகீர் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் டி.வெங்கட் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஏ.குணசேகரன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டப் பொருளாளர் ஏ.பழனி, பீடி சங்க செயலாளர் எஸ்.பாப்பூ, வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.தமீம் சேட்டு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணி மேகலை பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர் ஜி.குப்புசாமி வரவேற்றார். துணைத் தலைவர் எம்.அண்ணாமலை நன்றி கூறினார். தீர்மானங்கள் ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், ஆன்லைனில் பதிவு செய்தவர்க ளுக்கு உடனே அடையாள அட்டை வழங்க வேண்டும், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, பென்சன் உதவி தொகை ஆகியவற்றை காலம் தாழ்த்தா மல் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக டி.வெங்கட், செயலாளராக எம்.ஜாவித், பொருளாளராக ஏ.குண சேகரன் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
