தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சிசேரியன்!
21 Jun 2026, 2:26 am
<p><strong>தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சிசேரியன்!</strong></p><p>கோவை, ஜூன் 20- தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சிசேரியன் அறுவை சிகிச்சைகள் அதிகரிப்பது ஒட்டு மொத்த மருத்துவத் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் கவலை தெரிவித்துள்ளார். கோவை இஎஸ்ஐ அரசு மருத்து வக்கல்லூரியின் 5 ஆவது பட்டமளிப்பு விழா சனியன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக் பங் கேற்று 100 இளம் மருத்துவர்க ளுக்கு பட்டங்களை வழங்கி அமைச் சர் அருண் ராஜ் பேசுகையில், மருத்து வப் பணி என்பது புனிதமான சேவை. சில தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சிசேரியன்கள் அதிக ரிப்பது வருத்தமளிக்கிறது. இளம் மருத்துவர்கள் தங்களின் ‘ஹிப் போக்ரடிக்’ உறுதிமொழியின் உண் மையான அர்த்தத்தை புரிந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண் டும். நீட் தேர்வு அழுத்தத்தால் இரண்டு உயிர்களை இழந்தது ஒரு மருத்துவராகவும், அமைச்சராக வும் எனக்கு மிகுந்த வேதனைய ளிக்கிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, அனைவருக் கும் தரமான மருத்துவச் சேவை வழங்குவதையே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் பழுத டைந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்தி ரத்தை மாற்றுதல், இருதய நிபுணர் நியமனம், கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் நர்சிங் கல் லூரி மாணவர் சேர்க்கை ஆகிய கோரிக்கைகள் மீது விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பன வர், எம்.எல்.ஏ-க்கள் சுகுமார், கனி மொழி சந்தோஷ், கல்லூரி முதல் வர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
