உன்னதபுரத்துக் கதைகள்: மனிதர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் தூரிகை
17 May 2026, 8:51 pm

உன்னதபுரத்துக் கதைகள்: மனிதர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் தூரிகை

ஓவியராக நமக்கு அறிமுகமான பிம்பம் ஷாகுல் அவர்கள், தற்போது ஒரு தலைசிறந்த எழுத்தாளராகவும் பரிணமித்திருக்கிறார் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அவரது ‘உன்னதபுரத்துக் கதைகள்’ என்னும் நூல். இப்புத்தகம் குறித்து எனது முப்பது ஆண்டுகால நட்பின் பின்னணியில் பதிவு செய்வது நெகிழ்ச்சியைத் தருகிறது.

அடிமனதின் அனுபவப் பதிவுகள்

தஞ்சாவூர் அருகிலுள்ள தனது சொந்த ஊரான மெலட்டூரையும், அதைச் சுற்றியும் தன்னோடு பயணித்த எளிய மனிதர்களைத் தனது எழுத்துத் தூரிகையின் மூலமாக மிக அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மாந்தர்களைப் படிக்கும்போது இது அவரது முதல் நூல் என்ற எண்ணமே வாசகர்களுக்குத் தோன்றுவதில்லை. முதல் கதையில் வரும் பல்கீஸ் பாட்டியாகட்டும், தனது ஆசிரியர்களான பெரியார் பெருந்தொண்டர் மற்றும் விஸ்வநாத ஐயர் ஆகட்டும் – அனைத்து மாந்தர்களையும் மிக இயல்பாக, ஆழமாக வாசகர் மனங்களில் பதிய வைத்துள்ளார்.

வண்ண மயமான கதையாடல்

ஓவியக் கலையில் தேர்ந்தவரான ஷாகுல், மனிதர்களின் குணாதி சயங்களையும், கிராமத்து எதார்த்த ங்களையும் வார்த்தைகளால் ஓவிய மாகவே தீட்டியுள்ளார். வர்க்கப் பாகு பாடற்ற மனிதநேயமும், அடித்தட்டு மக்க ளின் மீதான அக்கறையும் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகிறது. இந்நூலில் உள்ளவற்றை வெறும் கட்டுரைகளாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. இவை பிம்பம் ஷாகுலின் அடிமனதில் தங்கியிருந்த ஆழமான அனுபவங்களின் எழுத்துவடிவம். ஒரு மனிதரின், ஓர் இயக்க வாதியின் தன்வரலாறாகவே (Autobi ography) இதனை நாம் மதிப்பிடலாம்.

ஒவ்வொரு தோழரும், இலக்கிய வாசகர்களும் அவசியம் வாங்கி வாசிக்க வேண்டிய உன்னதமான படைப்பு இது.. உன்னதபுரத்துக் கதைகள் ஆசிரியர்: பிம்பம் ஷாகுல் வெளியீடு/விற்பனை: பாரதி புத்தகாலயம், சென்னை விலை: ₹140