தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

15 May 2026, 4:10 pm
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்திருந்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அமர்வு, சேங்கரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும், மேல்முறையீட்டு விசாரணை தாமதமானால், தண்டனையை நிறுத்திவைக்கும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தது.

போக்சோ சட்டத்தின் கீழ் சேங்கருக்கு எதிரான “கடுமையான பாலியல் வன்கொடுமை” குற்றச்சாட்டு பொருந்தாது என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. “குழந்தைகளை பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மிகத் தொழில்நுட்ப ரீதியாக அணுக முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், குல்தீப் சிங் சேங்கருக்கு 2019ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.