உன்னாவ் பாலியல் வழக்கு குல்தீப் செங்காரின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
15 May 2026, 8:42 pm

உன்னாவ் பாலியல் வழக்கு குல்தீப் செங்காரின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

புதுதில்லி 2017ஆம் ஆண்டு உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த, தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதி மன்றம் வெள்ளியன்று ரத்து செய்தது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் செங்காருக்கு ஆயுள் தண்டனை, ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது. ஆனால் 2025 டிசம்பர் மாதம் தில்லி உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், செங்காரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயர்நீதி மன்றத்தின் முடிவை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வெள்ளியன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் (சிபிஐ) சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், செங்கார் தரப்பில் வழக்கறிஞர் என். ஹரிஹரன் வாதிட்டனர்.

இருதரப்பு வாதத்திற்குப் பின் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு,”நாங்கள் இந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்கிறோம். போக்சோ சட்டத்தின் கீழ் ‘கடுமையான ஊடுருவல் பாலியல் வன்கொடுமை’ குற்றச்சாட்டு செங்காருக்கு எதிராகப் பொருந்தாது என்று தில்லி உயர்நீதி மன்றம் எப்படி உத்தரவிட்டது? யாராக இருந்தாலும் போக்சோ சட்டத்தின்படி, ஒரு பொது ஊழியர் பாலியல் குற்றத்தைச் செய்தால் அது கடுமையான குற்றம் தான். உயர்நீதிமன்றத்தின் அதீத தொழில்நுட்ப ரீதியான முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை. போக்சோ என்பது குழந்தைகளை பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் ஒரு தண்டனைச் சட்டமாகும். அதனால் தில்லி உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய உத்தரவை ரத்து செய்கிறோம். தில்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் 2 மாதங்களுக்குள் பிரதான மேல்முறையீட்டு மனுவை முடிக்க முயற்சி செய்ய வேண்டும். கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்பே தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு மனு விரைவில் முடிக்கப்படாவிட்டால், செங்காரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான கோரிக்கையை உயர்நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்கலாம்” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.