தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் சீரமைக்கப்படாத சாலைகள்: பொதுமக்கள் கடும் அவதி

28 Dec 2025, 5:05 pm
மதுரையில் சீரமைக்கப்படாத சாலைகள்: பொதுமக்கள் கடும் அவதி
<p><strong>மதுரையில் சீரமைக்கப்படாத சாலைகள்: பொதுமக்கள் கடும் அவதி</strong></p> <p>மதுரை, டிச.28- மதுரை மாநகராட்சி பகுதிகளில் மொத்தமாக சுமார் 1,545 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் உள்ளன. இதில் 1,253.13 கிலோ மீட்டர் சாலைகள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய சாலை வலையமைப்பு இருந்தும், நகரின் பல முக்கிய சாலைகள் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் மிக மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கோச்சடை&ndash;மேலக்கால் சாலை, முடக்குசாலை&ndash;தேனி மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, பைபாஸ் சாலையிலிருந்து தீக்கதிர் சந்திப்புக்கு செல்லும் அணுகு சாலை, தத்தனேரி மெயின் ரோடு (அருள்தாஸ் புரம் பகுதி), அகிம்சாபுரம், புதூர் வண்டிப்பாதை, ரிசர்வ் லைன் காலங்கரை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் பள்ளங்களுடன், சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன ஓட்டிகள் தினசரி கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி பள்ளங்கள் தெரியாமல் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக முக்கிய சாலை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் தாமதமாகச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், &ldquo;வரி செலுத்தும் மக்களுக்கான அடிப்படை வசதியான சாலைகளே இவ்வாறு மோசமான நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆண்டுதோறும் சாலை சீரமைப்பு குறித்த அறிவிப்புகள் வெளியானாலும், நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வாரம் வரும்போது, பெயருக்கு மட்டுமே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உண்மையான சாலை பாதுகாப்பு சாலைகளை சரியாக அமைப்பதில்தான் உள்ளது&rdquo; என்றனர். மேலும், &ldquo;சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை தற்காலிகமாக ஜல்லிக்கற்கள் போட்டு மூடிவிட்டு, அவற்றை முறையாக சீரமைக்காமல் விட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது. இதனால் வாகனங்கள் பழுதடைவதோடு, நிலைதடுமாறி விழும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன; மருத்துவச் செலவுகளும் உயர்கின்றன&rdquo; என்றும் குற்றம்சாட்டினர். எனவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலைகளின் நிலையை நேரில் ஆய்வு செய்து, முக்கிய சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து தரமான, நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.