உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் ஒப்படைப்பு
30 Oct 2026, 12:44 am
<p><strong>உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் ஒப்படைப்பு</strong></p><p>தருமபுரி, அக்.29-தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத 44 நாட்டுத்துப்பாக்கிகளை, வனத்துறையினர் ஆட்சியர் முன்னிலையில் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை தாமாகமுன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் கூட்டங்கள், துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்தொடர்ச்சியாக, தருமபுரி வனக்கோட்டத்திற்குட்பட்ட 8 வனச்சரகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து 44உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஓராண்டில் தருமபுரி-11, பென்னாகரம்-7, அரூர்-6, கோட்டப்பட்டி-2, மொரப்பூர்-6, தீர்த்தமலை-12 என மொத்தம் 44 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வனத்துறையினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று காட்சிப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், முன்னிலையில், மாவட்ட கூடுதல்காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடம் முறையாக ஒப்படைத்தனர். தொடர்ந்து ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும், தருமபுரி ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
