அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: ஓய்வூதியர்கள் தொடர் போராட்ட எச்சரிக்கை
11 Jul 2026, 10:38 pm
<p><strong>அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: ஓய்வூதியர்கள் தொடர் போராட்ட எச்சரிக்கை</strong></p><p>சிதம்பரம், ஜூலை 11- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழி யர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படாததால், 300-க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக, ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அறிவுடை நம்பியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், நிலுவையில் உள்ள ஓய்வூதியத் தொகையையும், மாதாந்திர ஓய்வூதியத்தையும் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில், ஆகஸ்ட் முதல் வாரம் முதல் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஓய்வூதியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
