தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்கலைக் கழகங்களில் ‘இந்தியா’வுக்குப் பதில் ‘பாரத்’ ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பால் மாற்றப்படுகிறது

20 Jun 2026, 10:06 pm
பல்கலைக் கழகங்களில் ‘இந்தியா’வுக்குப் பதில் ‘பாரத்’ ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பால் மாற்றப்படுகிறது

பல்கலைக் கழகங்களில் ‘இந்தியா’வுக்குப் பதில் ‘பாரத்’ ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பால் மாற்றப்படுகிறது

புதுதில்லி ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பல்க லைக்கழகங்களில் ‘இந்தியா’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்புச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், அலுவலகக் கடிதங்கள், அழைப்பிதழ்கள் மற்றும் பெயர்பலகைகளில் ‘இந்தியா’ என்ற பெயர் நீக்கப்பட்டு ‘பாரத்’ என மாற்றப் பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்புடன் தொடர்புடைய கல்விப் பிரிவின் தீவிர முயற்சியால் இந்த மாற்றம் நடந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல் பூரில் உள்ள ராணி துர்காவதி பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா ஜூன் 21 (இன்று) நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். இந்த விழாவில் வழங்கப்படும் அனைத்துப் பட்டங்களிலும் ‘இந்தியா’வுக்குப் பதிலாக ‘பாரத்’ என்றே அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ராஜேஷ் குமார் வர்மா கூறுகையில், நாம் பாரத மக்கள்; நமது நாட்டின் உண்மையான பெயரும் பாரத் தான். இந்தியா என்ற பெயர் பிற்காலத்தில் வந்தது என்று தெரிவித்துள் ளார். மேலும், இந்த முயற்சியைப் பாராட்டி 2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் போது தங்களுக்குப் பாராட்டு விழா நடத்தப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணியில் ஆர்எஸ்எஸ்

இந்தப் பெயர் மாற்றப் பிரச்சாரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெற்ற ‘சிக்ஷா சமஸ்கிருதி உத்தன் நியாஸ்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர் எம்.எல்.குப்தா, ‘இந்தியா நஹின் பாரத்’ (இந்தியா அல்ல, பாரத்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஜி-20 (G20) மாநாட்டின் போது ஆங்கிலத்தில்கூட ‘பாரத்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இது நாட்டின் மனநிலை மாறி வருவதன் அறிகுறி” என கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையே போட்டி

‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்து வதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரு போட்டியே நிலவுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தூர் தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல் கலைக்கழக நிர்வாகம், தங்களது மாநிலத்தில் தாங்கள் தான் முதன்முதலில் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததாகவும், தங்களைப் பின்பற்றியே மற்ற பல்கலைக் கழகங்கள் செயல்படுவதாகவும் கூறிவரு கிறது. சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் மத்திய பல்கலைக்கழக மும் இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தி யுள்ளது.

ஒன்றிய பாஜக அரசு ‘பாரத்’ என்ற பெயரை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கடந்த ஜி-20 மாநாட்டின் போது, குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய இரவு உணவு அழைப்பிதழில் ‘பிரசிடென்ட் ஆஃப் பாரத்’ (President of Bharat) எனக் குறிப்பிடப்பட்டது நாடு தழுவிய அளவில் பெரும் அரசியல் விவா தத்தையும் எதிர்ப்புகளையும் உருவாக்கி யது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.