முந்தய பக்கம்

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத் தலைவர் பதவி விலகல்!

18 Mar 2026, 12:44 pm
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத் தலைவர் பதவி விலகல்!
<p>ஈரானுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத் தலைவர் ஜோசப் கென்ட் &nbsp;பதவி விலகியுள்ளார்.<br /> 20 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் &lsquo;கிரீன் பெரட்&rsquo; (Green Beret) அதிகாரியாகப் பணியாற்றிய ஜோசப் கென்ட், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மிகவும் நெருக்கமான ஜோசப் கென்ட், ஈரானுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.<br /> இது தொடர்பான அறிக்கையை எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், ஈரானால் அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், இஸ்ரேலின் அழுத்தால்தான் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கிய இஸ்ரேல், அமெரிக்காவை இந்தப் போருக்குள் தள்ளியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram