ஆதார விலையை சட்டப்படியாக வழங்கிடுக ஐக்கிய விவசாயிகள் முன்னணி தர்ணா
27 Nov 2025, 3:11 pm
<p>சேலம், நவ.27- வேளாண் விளை பொருட் களுக்கு ஆதார விலையை சட்டப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, ஆத்தூர் மணிக்கூண்டு அரு கில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தர்ணா நடைபெற்றது. தில்லி விவசாயிகள் வரலாற்று சிறப்பு மிகு போராட்டத்தின் விளைவாக மோடி அரசு ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளை நிறை வேற்றி தரவேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதா மற்றும் விதை மசோதா 2025 ரத்து செய்ய வேண்டும். விவ சாய மற்றும் மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து வியாழனன்று ஐக் கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் தொடர் தர்ணா நடை பெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கி ணைப்பாளர் அரங்க.சங்கரய்யா தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆத்தூர் தலைவர் இல.கலைமணி, ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத்தலைவர் த.இந் திரஜித் சிறப்புரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.கே.செல்வ ராஜ், மாவட்டத் தலைவர் அன்பழகன், விதொச நிர்வாகிகள் ராமசாமி, ஆர்.வெங்க டாசலம், மாரிமுத்து, வி.பழனிமுத்து, ஐக் கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
