தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி யுனைடெட் புரூவரீஸ் ஆலை தொழிலாளர்களின் அதிரடி கிளர்ச்சி

5 Jun 2026, 8:16 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி யுனைடெட் புரூவரீஸ் ஆலை தொழிலாளர்களின் அதிரடி கிளர்ச்சி

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி யுனைடெட் புரூவரீஸ் ஆலை தொழிலாளர்களின் அதிரடி கிளர்ச்சி

கிங்ஃபிஷர் பிராண்ட் ஆலையை உலுக்கிய வர்க்கப் போராட்டம்

வேலைநிறுத்தம் 52

பிவாடி, ஜூன் 5- “முதலாளிகளுக்கு ‘நல்ல காலத்தின் ராஜா’ (King of Good Times) என்று விளம்பரப் படுத்தப்படும் ஒரு பிராண்டை உருவாக்கும் தொழிலாளர்களின் சொந்த வாழ்க்கை எப்படிப் போகிறது?” - கடந்த ஏப்ரல் மாத வர்க்கப் போராட்டத்திற்குப் பிந்தைய சூழல் குறித்து ‘நியூஸ்தாலி’ (NewsThali) ஊடகம் வெளியிட்டுள்ள கள ஆய்வு இக்கேள்வியோடு தொடங்குகிறது. ராஜஸ்தான் மாநிலம் பிவாடி சோபங்கி (Chopanki) தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ‘யுனைடெட் புரூவரீஸ் லிமிடெட்’ (United Breweries Limited - UBL) மதுபான உற்பத்தி ஆலையில், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக வெடித்த தொழிலாளர்களின் அதிரடி ஊதியப் போராட்டம், கார்ப்பரேட் நிர்வாகங்களின் பிடிவாதத்தை உடைத்து வர்க்க வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

முன்னர் விஜய் மல்லையா குழுமத்தின் கீழ் இருந்து, தற்போது உலகளாவிய ‘ஹைனிகன்’ (Heineken) குழு மத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆலை, வட இந்திய விநியோகச் சங்கிலியின் முதன்மை மையமாக விளங்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பூஜ்ஜிய திரவக் கழிவு (Zero Liquid Discharge) போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு ஆலை இயங்கினாலும், இங்குள்ள தொழிலாளர்களின் மீதான உழைப்புச் சுரண்டல் முறை மாறவில்லை. ஆலையில் பணிபுரியும் சுமார் 450 தொழிலாளர்களில், 150-க்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள்; மீதமுள்ள பெரும்பான்மையான உழைப்புப் படையினர் அனைவரும் எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாத தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர்.

அற்ப ஊதிய அவலமும் எல்லையைக் கடந்த வர்க்க எழுச்சியும்

அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் கணிசமாக உயர்த்தப்பட்டதன் தாக்கம், சோபங்கி தொழிற்பேட்டையையும் உலுக்கியது. இப்பிராந்தியத்தில் கடந்த காலங்களில் ஹரியானா சோனிபட் யுபிஎல் ஆலையில் 500 நாட்களைக் கடந்து நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிற்சங்கப் போராட்டங்களின் பின்னணியும், 2025-இல் கலால் வரி மாற்றத்திற்கு எதிராக நடந்த 12 நாள் போராட்டங்களின் அனுபவமும் தொழிலாளர்களுக்கு உத்வேகமளித்தன. சோபங்கி ஆலையில் முறையான தொழிற்சங்கப் பாதுகாப்பு இல்லாத சூழலிலும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தன்னிச்சையாக அணிதிரண்டனர்.

போராட்டத்திற்கு முன்பு, இவ்வாலையின் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரக் கடுமையான வேலைக்கு மாதத்திற்கு வெறும் ₹10,500 முதல் ₹11,500 மட்டுமே அற்ப ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய பணவீக்கம், வாடகை மற்றும் குடும்பச் செலவுகளுக்கு இத்தொகை சற்றும் போதுமானதாக இல்லை. இதனால் கொதித்தெழுந்த தொழிலாளர்கள், அண்டை மாநில ஊதியக் கட்டமைப்புக்கு இணையாக மாதக் குறைந்தபட்ச ஊதியத்தை ₹20,000 ஆக உயர்த்தக் கோரியும், முறையான கூடுதல் நேர (OT) ஊதியம் மற்றும் கண்ணியமான பணிச்சூழலை வலியுறுத்தியும் ஆலை வாயிலில் மாபெரும் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

தொழிலாளர்களின் வர்க்க ஒருமைப்பாடும் உறுதியும்

சோபங்கி-பத்ரேடி தொழில் வழித்தடத்தில் உள்ள சுப்ராஜித் இன்ஜினியரிங், ரிலாக்சோ, நிப்பான் போன்ற அண்டை ஆலைத் தொழிலாளர்களோடு கைகோர்த்து, யுனைடெட் புரூவரீஸ் தொழிலாளர்கள் நடத்திய வாயில் முற்றுகைப் போராட்டம் ஆலையின் உற்பத்தியை முடக்கியது.

ஆலை வாயிலில் திரண்ட தொழிலாளர்கள் தங்களின் ஆதங்கங்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தினர்.

“நிர்வாகத்தின் சுரண்டல் முறை எங்களை ஆத்திர மடையச் செய்கிறது. எங்களுக்கு மட்டும் மனைவி, குழந்தை கள் இல்லையா? அவர்களை இந்த அற்பக் கூலியை வைத்துக் கொண்டு எப்படிப் பாதுகாப்பது? இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தான் நிர்வாகத்தின் கண்களைத் திறந்துள்ளது. போராட்டம் மட்டும் நடக்கவில்லை எனில், அவர்கள் ஒரு பைசா கூட உயர்த்தியிருக்க மாட்டார்கள். இனி அவர்கள் எங்களை வேலையை விட்டு நீக்கினாலும் சரி, எதைச் செய்தாலும் சரி, எங்களின் உரிமைகளை நிலைநாட்டாமல் பின்வாங்க மாட்டோம்” என்று ஒரு தொழிலாளி கொந்தளித்தார்.

இப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்கப் பலத்த காவல் படை குவிக்கப்பட்ட போதிலும், தொழிலாளர்கள் தங்களின் போர்க்குணமிக்க ஒருமைப்பாட்டின் மூலம் போராட்ட த்தை அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடத்தினர்.

வென்றெடுக்கப்பட்ட ஊதிய உயர்வும் தொடரும் வர்க்க விழிப்புணர்வும்

போராட்டம் தீவிரமடைந்து உற்பத்திப் பாதிப்பு நீடித்த தால், மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறை மற்றும் பிவாடி உற்பத்தியாளர்கள் சங்கம் (BMA) ஆகியவை அவசர மாகத் தலையிட்டன. தொழிலாளர்களின் தற்காலிகப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தை களின் விளைவாக, நிர்வாகம் தொழிலாளர்களின் கோரி க்கைகளுக்குப் பணிந்து ஊதிய உயர்வை வழங்க ஒப்புக்கொண்டது.

இப்பிராந்தியத்தின் அண்டை ஆலைகளில் அமல்படுத்தப் பட்ட ₹3,370 ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் சலுகைகளின் கட்டமைப்புக்கு இணையாக, யுனைடெட் புரூவரீஸ் ஆலை யிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம், பணிச்சூழ லில் கணிசமான மேம்பாடுகள் எழுத்துப்பூர்வமாக வென்றெடுக்கப்பட்டன.

போராட்டத்தின் விளைவாக ஊதிய உயர்வு எட்டப்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிய போதிலும், கார்ப்பரேட் நிர்வாகங்களின் தந்திர உத்திகள் குறித்தும், தங்களின் முழுமையான உரிமைகள் குறித்தும் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க விழிப்புணர்வும், இன்னும் முழுமையாகத் தீராத அதிருப்தியும் நீடித்து வருகிறது. எத்தகைய நவீன மற்றும் தானியங்கி ஆலையாக இருந்தாலும், உழைக்கும் வர்க்கத்தின் கூட்டுப் போராட்டமே உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரே வழி என்பதைச் சோபங்கி தொழிலாளர்களின் இந்த ஊதிய எழுச்சி மீண்டும் நிரூபித்துள்ளது.

தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.