தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக! யுனைட் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

12 May 2026, 1:58 am
4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக! யுனைட் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக! யுனைட் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, மே 11 – ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று ஐடி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐடி ஊழியர்கள் சங்கத்தின் (யுனைட்) தென்சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு திங்களன்று (மே 11) கிண்டியில் உள்ள விபிசி நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மாநாடு, ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ஐடி மற்றும் ஐடி சார்ந்த ஊழியர்களின் பணியிலும், சமூக பாதுகாப்பு, உடல் மற்றும் மன நிலையிலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு இந்த சட்டத் தொகுப்பை அமல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளது.

ஐடி மற்றும் ஐடி சார்ந்த ஊழியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முத்தரப்பு பேச்சுவார்த்தை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மாநாடு கோரியுள்ளது.

மாநாட்டில், நொய்டாவில் போராடி வரும் தொழிலாளர்களுக்கு சங்கத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

பரணிதரன் தலைமையில் நடைபெற்றது இந்த மாநாட்டை, சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் துவக்கி வைத்தார்.

சிஐடியு மாநிலச்செயலாளர் கே.சி. கோபிகுமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம், செயலாளர் ஜி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

சங்கத்தின் அமைப்பு செயலாளராக வினோத், பிரச்சார செயலாளராக ஜெயின், பொருளாளராக ரோஹித் உட்பட 7 பேர் கொண்ட மாவட்ட நிர்வாககுழுவும், 14 பேர் கொண்ட மாவட்டக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.