தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்

13 May 2026, 2:30 am
வேலூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்
<p><strong>வேலூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>வேலூர், மே 12- வடமாநிலங்களில் போராடும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்தும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், எல்பிஎப் ஞானசேகரன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சங்கர்மேஸ்திரி, ஐஎன்டியுசி மாவட்ட பொறுப்பாளர் முகமது அலி ஜின்னா, எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் கலைவாணி ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.காசி, எல்பிஎப் மாவட்ட செயலாளர் வெ.கலைநேசன், ஏஐடியுசி மாவட்ட துணை தலைவர் எல்.மணி, ஐஎன்டியுசி எம்.ஏகாம்பரம் மற்றும் எச்எம்எஸ் மாநில செயலாளர் கா.வெ.திருப்பதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26ஆயிரம் வழங்குதல், ஒப்பந்த முறையை ஒழித்து அனைவரையும் நிரந்தரப்படுத்துதல் மற்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.