குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
13 Feb 2026, 5:58 pm
<p><strong>குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை</strong></p>
<p>நாமக்கல், பிப்.13- பரமத்தி அருகே உள்ள மணிய னூர் ஊராட்சியில் குடிநீர் விநியோ கம் முறையாக செய்யப்படாததை கண்டித்து, பொதுமக்கள் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், மணிய னூர் ஊராட்சியில் 500க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றனர். இப்பகுதிக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஜேடர்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையிலி ருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகி றது. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு பூலாம்பட்டியில் இருந்து புதிய குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டதை தொடர்ந்து, பழைய இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்ற னர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள னர். தண்ணீர் இன்றி அவதிப்பட்ட பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் தீர்வு காணப்படாததால், பரமத்தி–திருச் செங்கோடு சாலையில் காலிக்குடங் களுடன் அமர்ந்து புதனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர், பொதுமக்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி, வெள் ளியன்று அலுவலகத்திற்கு வாருங் கள்; பிரச்சினையை தீர்த்து வைப் போம்” என உறுதி அளித்தனர். அத னைத் தொடர்ந்து வெள்ளியன்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக் கள் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் திரண்டனர். ஆனால், அலுவலர் தங்களுடன் உரிய முறை யில் பேசவில்லை என குற்றம் சாட்டி பொதுமக்கள் ஆவேசம டைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர், பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இரண்டு நாட்க ளுக்குள் குடிநீர் பிரச்சினை தீர்க் கப்படும்” என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக் கள் அமைதியாக கலைந்து சென்ற னர். இரண்டு நாட்கள் தண்ணீர் வர வில்லை என்றால், நாமக்கல் ஆட் சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவோம், என்றார். இந்த சம்பவத்தால் பர மத்தி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் சிறிது நேரம் பரபரப்பு நில வியது.</p>
<p> </p>
