நாடாளுமன்றத்திற்கு வருகை தராமல் ஓட்டம் பிடிக்கும் ஒன்றிய அமைச்சர்கள்
14 Dec 2025, 3:45 pm
<p><strong>நாடாளுமன்றத்திற்கு வருகை தராமல் ஓட்டம் பிடிக்கும் ஒன்றிய அமைச்சர்கள்</strong></p>
<p>புதுதில்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி யது. டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொட ரில் பிரதமர் மோடியைப் போல அமைச்சர்களும் அவைகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். 2024இல் 3ஆவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்த பின்பு மோடி நாடாளுமன்றத்திற்கு சரி வர வருவதே இல்லை. 20 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடை பெற்றால், வெறும் 2 நாட்கள் மட் டுமே அவையில் இருப்பார். அந்த 2 நாட்களிலும் எதிர்க்கட்சியினர் பேசத் தொடங்கினால் அவையில் இருந்து ஓட்டம் பிடித்து விடுவார். இந்நிலையில், மோடியைப் போல அமைச்சர்களும் நாடாளு மன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கா மல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். மக்களவையில் சிறிது நேரம் இருந்துவிட்டு கேண்டீனில் சாப்பிட்ட பின்பு நாடாளுமன் றத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக டிச.12 அன்று (வெள்ளி) மாநிலங்க ளவை கூடியபோது ஒன்றிய கேபி னட் அமைச்சர்கள் யாரும் இல்லா ததால், அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் 10 நிமிடங்க ளுக்கு அவையை ஒத்திவைத்தார். சி.பி. ராதாகிருஷ்ணன் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடு மையாக விமர்சித்தன. எதிர்ப்பால் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு வருத்தம் தெரிவித்து சமாளிப்பில் ஈடுபட் டார். 2 நாட்கள் விடுமுறைக்குப் பின் திங்களன்று மீண்டும் நாடாளு மன்ற அவைகள் கூடுகின்றன. வெள்ளியன்று போல ஒன்றிய அமைச்சர்கள் நாடாளுமன்றத் திற்கு வருவார்களா? இல்லை, கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வெளி யேறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு களுடன் கேள்விகள் கிளம்பியுள் ளன.</p>
